மாங்கல்ய பலம் பெருகும் பங்குனி விரதம்

உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன் உத்திர நட்சத்திரம் பூரண சந்திரனுடன் இணையும் திருநாள் பங்குனி உத்திரத் திருநாள் சூரியன்-சந்திரன் இருவருடன் தொடர்பு பெற்றிருப்பதால் இத் திரு நாளுக்கு தனிச்சிறப்பு உண்டு.

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பமாகும். இம் மாதத்தில் பெய்யும் மழையை பங்குனிப் பழம் என்று கூறுவர். தெய்வத் திருமணங்கள் பல பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்ற தாகப் புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பங்குனி உத்திர திருநாளை கல்யாண விரத நாள் என்று கூறுவர்.

சிவன்-பார்வதி திருமணம் நடந்த தினம் பங்குனி உத்திரத் திருநாள் தான் அன்று காமாட்சியாக இறைவன் கரம்பித்தாள் இறைவி. தெய்வாணையை முருகப் பெருமாள் திருமணம் செய்து கொண்டதும் வள்ளித் குறத்தி அவதரித்த பெருமையும் பங்கு உத்திரத் திருநாளுக்கு உண்டு.

பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினமும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.