ஸி ஜின்பிங் அழைப்பை ஏற்று டிரம்ப் சீனா செல்கிறார்

சீனா அதிபர் ஸி ஜின்பிங் 2 நாள் பயணமாக அமெரிக்கா வந்தார். அவருடன் மனைவியும் வந்திருந்தார். புளோடோரியாவில் உள்ள தனது மாரா-லாகோ உல்லாச விடுதியில் ஸி ஜின்பிங்குக்கு அதிபர் டிரம்ப் விருந்து அளித்தார்.

அப்போது சீனாவுக்கு வருமாறு டிரம்புக்கு அதிபர் ஸி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அதை டொனால்டு டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

எனவே அவர் இந்த ஆண்டில் சீனா செல்கிறார்.

இத்தகவலை அமெரிக்கா வெளியுறவுதுறை மந்திரி ரெஸ் டில்லர்சன் தெரிவித்தார். இருநாட்டு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சு நல்லமுறையில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது என்றார்.