இந்த ஆண்டு தேசிய விருது வழங்குவதில் பெரும் பாரபட்சம் பார்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 64-வது திரைப்பட தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
சிறந்த தமிழ் திரைப்படமாக ‘ஜோக்கர்’ தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது கவிஞர் வைரமுத்துவுக்கு ஏழாவது முறையாக அறிவிக்கப்பட்டது. சூர்யா நடித்த ’24’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவுக்காகவும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கபாலி உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை. பெரும்பாலான விருதுகள் இந்திப் படங்களுக்கே கிடைத்தன. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கதில் தேசிய விருதுகள் குறித்த குற்றம் சாட்டியுள்ளார்.
அதில், “நடுவர்களின் செல்வாக்கும், ஒரவஞ்சனையும் மட்டுமே விருதுகளில் தெரிகிறது, ஒருதலை சார்பாக விருதுக்கான கலைஞர்கள், படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன,” என்று கூறியுள்ளார். இதற்கு இணைய உலகில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.