இந்தியாவில் தற்போது நடக்கும் பத்தாவது ஐபிஎல் தொடரின் தொடர்நாயகன் விருதை அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தான் வாங்குவார் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சூதாட்ட பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக புனே அணி மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டிற்கான தொடர் நாயகன் விருதை ஹைதராபாத் அணியில் இருக்கும் டேவிட் வார்னர் தான் வாங்குவார் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியில் வார்னர், 4 டெஸ்ட்களில் விளையாடி 193 ஓட்டங்கள் தான் எடுத்தார்.
கொஞ்சம் ஏமாற்றமளிக்கும் டெஸ்ட் தொடருக்கு பின்னர் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகிறார். அதுவும் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஒரு அணியின் தலைவராக களம் இறங்குகிறார்.
அவர் ஒரு தொடக்க துவக்க ஆட்டக்காரராக உள்ளார். இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒரு தொடக்க துடுப்பாட்ட வீரரோ அல்லது ஒரு சுழற்பந்து வீச்சளரோ தான் தொடர் நாயகனாக வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.
இதனால் வார்னருக்கு தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.