வவுனியாவில் கடும்மழை காற்று காரணமாக 48 வீடுகள் சேதம்

வவுனியா காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் சுமார் 48 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்றுமாலை  ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழையினால் காத்தார் சின்னக்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் 48 வீடுகள் பகுதியளவிலும் சில வீடுகளின் கூரைகளும் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பாதிப்படைந்த வீடுகளில் இருந்த ஆவணங்கள் பலவும் அழிவடைந்துள்ளதுடன் பல வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.