வவுனியாவில் புகையிரதம் தடம் புரண்டது!

வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட புகைவண்டி தடம் புரண்டுள்ளது.

வவுனியா புகையிரத நிலந்த்தில் தரித்து நின்ற எரிபொருள் ஏற்றிச்செல்லும் புகைவண்டியே இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,இன்று காலை 09.15 மணியளவில் திருத்த வேலைகளிற்காக புகைவண்டி பாதையினை மாற்றுவதற்காக பயணித்த எரிபொருள் ஏற்றும் புகைவண்டிகள் கட்டுப்பாட்டை இழந்து தடம் மாறி அருகில் இருந்த அரச விடுதியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா புகையிரத நிலைய பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

இவ்விபத்தினால் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்பட வில்லை. இருப்பினும் அரச விடுதி கட்டிடங்கள் சேதமாகியுள்ளது.