கல்வி மேம்பாட்டில் இணைந்து செயல்படுவோம்! ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உறுதி!

இந்தியப் பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார். அப்போது, ‘ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்களின் மேம்பாட்டுக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரனாப்

நான்கு நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல், பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அவர், இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் சந்தித்தார். அப்போது, ஆஸ்திரேலியாவில் படிக்கும் 60,000 -க்கும் மேலான இந்திய மாணவர்களின் மேம்பாட்டுக்கு இரு நாடுகளும் இணைத்து செயல்படவேண்டும் என பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.

மேலும், ‘கடந்த சில வருடங்களாகப் பல்வேறு வகையிலும் ஆஸ்திரேலியாவுடனான உறவு வலுவடைந்து வருவதாகவும் தீவிரவாத ஒழிப்பில் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிப்பதாகவும்’ பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்தியாவில், ஆஸ்திரேலியா முதலீடு செய்யவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், அணுசக்திப் பணிகளுக்கான யுரேனியம் தேவைகளையும் ஆஸ்திரேலியாவிடம் கேட்டுள்ளது, இந்திய அரசு.