இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்ற பெருமையுடன் விளங்கும் டோனி, கடந்த 9 ஐ.பி.எல். தொடரிலும் கேப்டனாக திகழ்ந்து வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் டோனி புனே அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு கேப்டனாக செயல்பட்ட டோனியை, அந்த அணி நிர்வாகம் அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது.
மும்பைக்கெதிரான முதல் போட்டியில் புனே அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஸ்மித் முக்கிய காரணமாக இருந்தார். இதுகுறித்து புனே அணி உரிமையாளரின் சகோதரரான ஹர்ஸ் கோயன்கே ஸ்மித்தை புகழ்ந்து டுவிட் செய்திருந்தார். அத்துடன் டோனியுடன் ஒப்பிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் ஹர்ஸ் ஹோயன்கே கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டோனியின் மனைவி சாக்ஷி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹெல்மெட்டை அணிந்து செல்பி எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்ட் ஹர்ஸ் கோயன்கேவை பழிவாங்கும் விதத்தில் உள்ளது. அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். தொடரில் இடம்பெறும். இதில் டோனி கேப்டனாக இருப்பார். புனே அணிக்கு என்னுடைய ஆதரவு கிடையாது என்ற வகையில் அந்த செய்தி உள்ளது.
சாக்ஷி படத்திற்கு ஆதரவாக டோனி ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருப்பார் என்று ஸ்ரீனிவாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.