சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி!!

தேவையான பொருட்கள் :

கோவக்காய் – 1 கப்
தக்காளி – 3
தனியா தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை  – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
கரம் மசாலா தூள் – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்)
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1 பத்தை

செய்முறை :

* கோவக்காயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சிறிதளவு உப்பு போட்டு கோவக்காயை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

* வடிகட்டிய அதே சுடுதண்ணீரில் தக்காளியை போட்டு வேக வைத்து தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த கோவக்காயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

* அதே கடாயில் சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்ததும் அரைத்த தக்காளி சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகுமாறு 3 நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் வறுத்த கோவக்காயை தக்காளியில் போட்டு தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும்.

* அடுத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, கரம் மசாலா தூள் போட்டு சப்ஜி திக்கான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

* சூப்பரான கோவக்காய்  சப்ஜி ரெடி!