சசிகலா மீதான அன்னிய செலவாணி மோசடி வழக்கை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதால் அவர் சிறைவாசம் நீளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தினகரன் ஆகியோர் மீது அன்னிய செலவாணி வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க சசிகலா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த வருடம் மே மாதம் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.
அன்னிய செலவாணி வழக்கில் சசிகலா விடுவிக்கபட்டாலும் அவர் மீதான சிங்கப்பூரில் உள்ள அப்புவெஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடெட் தொடர்பான வழக்குகளில் அவரை விடுவிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.
சசிகலா அன்னிய செலவாணி வழக்கில் விடுவிக்கபட்டதை ரத்து செய்ய அமலாக்கதுறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து எழும்பூர் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் சசிகலா, தினகரன் ஆகியோர் இந்த வழக்கை சந்திக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இதனிடையில் அமலாக்கதுறை சசிகலா, தினகரன் ஆகியோர் அந்த வழக்கில் நிச்சயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்தால் ஏற்கனவே 4 ஆண்டு தண்டனையுடன் அவர் மேலும் சிறையில் சில ஆண்டுகள் இருக்க வேண்டி வரும்