தமிழக ஆட்சி கலைந்துவிடும்: மத்திய அரசின் திட்டம்! தமிழிசை பரபரப்பு தகவல்

தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றம் விசாரிக்கப்பட்டால், அரசு பதவி இழக்க நேரிடும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 7-ஆம் திகதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான பணம் போன்றவைகள் கைப்பற்றப்பட்டது.

இதனால் விஜயபாஸ்கரிடம் வருமானவரித்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை அருகே உள்ள விஜயபாஸ்கரின் கல்குவாரியிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த அதிரடி சோதனையால் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், வருமான வரித்துறை ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டால் தமிழக அரசு கவிழ்ந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும் கருத்துகளே பெரும்பாலும் உண்மையாக நடந்து வரும் நிலையில், இந்த கருத்தும் தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.