உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கை மரணத்திற்கான இழப்பீடு தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் உள்ள உறுப்பினர்ளின் இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உள்ள உறுப்பினர்கள் இயற்கை மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு இதுவரை 10000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இழப்பீட்டுத் தொகை இருமடங்காக அதாவது 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் இயற்கை மரணமடைந்தால் இனி 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.