சுப காரியங்களை தவிர்க்க வேண்டிய நாட்கள்

நாள் செய்வதை நல்லவன் செய்ய மாட்டான்; கோள் செய்வதைக் கொடுப்பவன் செய்யமாட்டான் என்பது பழமொழி.

எந்தக் கிழமையில், எந்த நட்சத்திரமும், திதியும் சேர்ந்தால் நல்ல காரியத்தை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அமைதிக் குறைவு அந்த நாட்களில் ஏற்படும் என்பதால் தான், சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஞாயிறு – ஹஸ்தம் – பஞ்சமி

திங்கள் – மிருகசீரிஷம் – சஷ்டி

செவ்வாய் – அசுவதி – சப்தமி

புதன் – அனுஷம் – அஷ்டமி

வியாழன் – பூசம் – நவமி

வெள்ளி – ரேவதி – தசமி

சனி – ரோகிணி – ஏகாதசி

இந்த நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் சுபகாரியங்களைச் செய்வது நல்லது.