யாழ் போதனா வைத்திய சாலையில் அனைத்துக் குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு

யாழ் போதனா வைத்திய சாலையில் அனைத்துக் குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது புதுவருடப்பிறப்பு காலம் என்பதால் குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கைகள் குறைவடைந்து காணப்படுகின்றது.

இதனை நிவர்த்தி செய்ய நடமாடும் குருதிக்கொடை முகாங்களில் ஏற்படுத்த தயாராகவுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்தார்.