31ஆவது வருடமான ஏவிளம்பி வருடம் நாளை வெள்ளிக்கிழமை உதயமாகின்றது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை மாதம் 13ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு தாண்டி 12.48 இற்கும்
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2017ஆம் ஆண்டு சித்திரை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 02.04 இற்கும் புத்தாண்டு உதயமாகின்றது.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை இரவு 8.48 தொடக்கம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.48 வரை விஷூ புண்ணிய காலமும்,
திருக்கணித பஞ்சாங்கம் படி வியாழக்கிழமை இரவு 10.04 தொடக்கம் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.04 வரை விஷூ புண்ணிய காலமாகும்.
வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம் புத்தாண்டு தினத்தன்று மஞ்சள் நிற ஆடையோ, மஞ்சள் அல்லது ஊதா நிற கரை அமைந்த ஆடை அணிவது சிறந்தது.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி14ஆம் திகதி வெள்ளி இரவு 12.09 முதல் 12.31 வரையிலும், 15ஆம் திகதி சனி இரவு 10.38 முதல் 11.38 வரையிலும், 17ஆம் திகதி திங்கள் மு.ப. 9.32 முதல் 11.51 வரையிலும் கைவிசேஷம் செய்யலாம்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 14ஆம் திகதி வெள்ளி இரவு 8.10 முதல் 9.45 வரையிலும், 15ஆம் திகதி ஞாயிறு இரவு 8.08 முதல் 9.30 வரையிலும், 17ஆம் திகதி திங்கள் மு.ப. 9.45 முதல் 11.00 வரையிலும் கைவிசேஷத்திற்கு சிறந்த நேரங்களாகும்.
உணவுகள்அறுசுவை அமைந்த உணவுகளுடன் பால்சோறு தேன் என்பனவையை சேர்ந்தருந்த வேண்டும்.
புனர்பூசம், சித்திரை 3ம், 4ம் கால்கள், சுவாதி, விசாகம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யலாம்.
பிறக்கும் இப் புதிய புத்தாண்டில் அனைவரும் நெற்றிக்கண் இணையதளம் சார்பில் வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.