இபலோகம பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நபர் குற்றவியல் விசாரணைகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நொச்சியாகமை பிரதேசத்தில் வைத்து அஜன்த்த புஷ்பகுமார எனும் குறித்த நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி குறித்த நபர் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்,குறித்த நபர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளது