கிளிநொச்சியில் உள்ள பல புகையிரதக் கடவைகளில் உள்ள சமிஞ்சை விளக்குகளில் ஏற்பட்ட தொழிநுட்பக்கோளாறினால் சில மணித்தியாலங்களாக தொடர்ந்து சிவப்புநிற சமிஞ்சை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பதாகவும் இதனால் குறித்த கடவைகளைக் கடக்கும் சாரதிகள் பல நிமிடங்கள் காத்திருந்து இது தவறான சமிஞ்சையை தருகிறது என உணர்ந்ததன் பின்னரே குழம்பியநிலையில் கடவையைக் கடக்கின்றனர் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார் .
இதனால் புகையிரதம் வருகிறதா இல்லை தவறான சமிஞ்சையா என உறுதி செய்யப்பட்டதன் பின்னரே பாதுகாப்புக் கடவைகளை அவதானமாக கடக்கவேண்டிய நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சியில் இருக்கின்ற பல புகையிரதக் கடவைகளினூடு நாள் ஒன்றிற்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்களும் பாதசாரிகளும் தமது போக்குவரத்தை மேற்கொள்கின்றனர் அத்துடன் கிளிநொச்சியில் புகையிரதக்கடவைகள் சீரின்மையால் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் உயிர் சேதங்களும் இடம்பெற்றுள்ளது.
எனவே இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு மிக விரைவில் இவ் தொழிநுட்ப்பக்கோளாறினை சரிசெய்துதருமாறு சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்