சாவகச்சேரி வந்த தாய் சோகத்துடன் திரும்பிய பரிதாபம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்றையதினம் கோலாகலமாக தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் பொதுமக்கள் அதிகளவில் சாவகச்சேரிக்கு வந்து புத்தாடைகள் இரவிரவாக கொள்வனவு செய்துள்ளனர். இதன் காரணமாக நேற்றையதினம் என்றும் காணாத அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மிருசுவில் பகுதியை சேர்ந்த தாயும் மக்களும் கொள்வனவு செய்துகொண்டிருந்த வேளையில், தலைக்கவசம் அணிந்து வந்த திருடர்கள் 2 வயது மதிக்கத்தக்க சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலியையும் பணப்பையையும் களவாடி சென்றுள்ளனர்.

இதனால் குறித்த தாய் புத்தாடை வாங்காமல் வீடு திரும்பியதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சில திருடர்களும் இந்த நேரத்தில் கைவரிசைகாட்டி வருவதாகவும் வர்த்ததகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் நடைபாதை வியாபாரிகள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.