இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் உள்ளார்.
இச்சம்பவம் நேற்றுக் காலை 11 மணியளவில் நல்லூர் சட்டநாதர் சிவன்கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் உரும்பிராயைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் சோதிநாதன் (வயது-48) என்பவரே தலை மற்றும் உடம்புப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரஸ்தாப குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் எத்தனை பேர் எங்கிருந்து வந்து வாள்வெட்டில் ஈடுபட்டனர் என்ற தகவல் முதற்கட்ட விசாரணையில் கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறையிடப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.