‘நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை’ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களைத் தொடங்கமாட்டார்கள்.
இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று, ‘மக்கள் எங்களை புறக்கணிக்கிறார்களே’ என்றுகூறி கண்ணீர் விட்டு முறையிட்டன.
உடனே ‘உங்கள் இரு திதிகளையும் மக்கள் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன்’ என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ‘ராமநவமி’ என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி ‘கோகுலாஷ்டமி’ என்றும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமரை, ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன் பெற்றனர்.