சசிகலா, தினகரன் ஆகியோரை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி பழிவாங்குகிறதாம். அதனால், தான் அமைச்சர்கள் திடீரென இருவரையும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்படும் நிலையில், சசிகலா தான் அதற்கு காரணம் என கூறப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா, ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து ஓரங்கட்டி தமிழக முதல்வராக வியூகம் வகுத்தார். இறுதியில் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பிரிந்து சென்று ஓபிஎஸ் அணி புகார் அளிக்க அதிமுக கட்சி மற்றும் அதன் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலாவால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட்டார்.
தேர்தலில் வெற்றிப்பெற்றால் எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு தமிழக முதல்வராக டிடிவி தினகரன் திட்டமிட்டிருந்துள்ளார்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற லஞ்சம் கொடுத்த வழக்கில் வசமாக சிக்கியுள்ளார் தினகரன். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்பபுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா-தினகரனுக்கு எதிராக கிளம்பியுள்ள எடப்பாடி அணி இருவரையும் அதிமுகவிலிருந்து ஒதுக்குவதாக அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது நினைவுக் கூரதக்கது.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் சசிகலா குடும்பம் தொடர்ந்து பல நெருக்கடியை சந்தித்து வருவதற்கு ஜெயலலிதாவின் ஆவி தான் காரணம் என கூறப்படுகிறது.
தனது மரணத்திற்கு காரணமான குடும்பத்தை ஜெயலலிதாவின் ஆவி பழிவாங்குவதாக தமிழக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.