இலங்கையை விட்டு வெளியேறிச் செல்ல விரும்பாத காரணத்தினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சீனப் புலமைப் பரிசிலை நிராகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனப் புலமைப் பரிசில் பெற்றுக்கொண்டால் ஓராண்டு காலம் சீனாவில் தங்கியிருந்து கல்வி கற்க வேண்டும்.
இதனால், ஓராண்டு காலம் நாட்டை விட்டு செல்ல கோத்தா விரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், சீனாவில் சென்று கல்வி கற்பதா இல்லையா என்பதனை இன்னும் கோத்தபாய ராஜபக்ஸ தீர்மானிக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.