தற்போதைய சூழ்நிலையில் தினகரன்அமைதியாகத்தான் இருக்க வேண்டும் என அவரது மனைவி அனுராத அறிவுறுத்தியால் அவர் பின்வாங்கியுள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அம்மா அணிக்குள் உட்கட்சிபூசல்கள் ஏற்பட்டு, பன்னீர் செல்வம் அணியோடு கைகோர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தினகரன் தரப்பினரையும் கட்சியை விட்டு ஓரங்கட்டியுள்ளனர்.
அமைச்சர்கள், முதல்வர் வீட்டில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இரவிலும் கூடி, விவாதித்த அத்தனை விஷயங்களையும், தனது தொடர்புகள் மூலமாக தனியாக திரட்டினார் தினகரன் மனைவி அனுராதா.
அதில், ஆறு எம்எல்ஏக்கள் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாக திரண்டிருப்பதாகவும், அதிலும் சிலர், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போய்விடக் கூடும் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.
அமைச்சர்கள் பலரும், தினகரன் சமீப நாட்களில் நடந்து கொண்ட அத்தனை விதங்களைக் கூறி வருத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் கமிஷனில் சசிகலாவின் பொதுச் செயலர் பதவிக்கு சிக்கல் வந்தது, தினகரன் மீதான பெரா வழக்கு திடீர் என உயிர் பெற்றது, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த பிரச்னையில் சிக்கியிருப்பது என பல்வேறு விஷயங்கள் ஒரே நேரத்தில் தினகரன் கழுத்தை நெரிப்பதற்குக் காரணம், நிலைமை புரியாமல், தினகரன் நடந்து கொண்டதுதான் என்பதை அறிந்து கொண்டார்.
இந்த தகவல்களின் அடிப்படையாக வைத்து,தற்போது அமைதியாக ஒதுங்கிகொள்ளுங்கள், இல்லையென்றால், அவர்கள் தொண்டர்களை திரட்டி உங்களைவிரட்டி அடிக்கக் கூடும். அது, அவமானத்தை ஏற்படுத்தி விடும்.
எனவே, சிறிது காலம் அமைதியாக இருங்கள் என கூறியுள்ளார்.