மருத்துவமனையில் ஜெயலலிதா இப்படியா சொன்னார்: உண்மையை போட்டுடைத்த தீபக்

அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த டிடிவி தினகரன் தற்போது முழுவதுமாக கட்சியை விட்டு விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் கூறுகையில், எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக கட்சியை வழிநடத்தி சென்றது என் அத்தை தான்.

அவர் சசி அத்தையை தவிர வேறு யாரையும் சேர்க்கவில்லை, கட்சிப் பொறுப்புகளும் வழங்கவில்லை.

அத்தை இறந்தபின்னர் சசி அத்தை பொறுப்புக்கு வந்ததை நான் வரவேற்றேன், ஆனால் டிடிவி தினகரனை நான் ஆதரிக்கவில்லை.

அத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, கட்சிப்பொறுப்பை தினகரனிடம் கொடுத்துவிட்டு ஓய்வு எடுக்கும் முடிவில் இருக்கிறேன் என சசிகலாவிடம் சொன்னதாக கூறினார்.

அது முற்றிலும் பொய்யான தகவல், அத்தை அப்பல்லோவில் இருந்த மூன்று மாதங்களும் நான் அங்கு தான் இருந்தேன்.

நானும், சசி அத்தை குடும்பமும் மூன்றாவது தளத்தில் தான் இருந்தோம், அத்தை சொன்னதாக தினகரன் கூறுவதை அவர்கள் குடும்பத்தினரே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது அவரது கற்பனை கதையே என கூறியுள்ளார்.