குப்பைகளை அகற்ற முடியாமல் போனதற்கு யுத்தம் காரணமா? மஹிந்தவின் புதிய கருத்து

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எமது ஆட்சிக்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதன் காரணமாகவே மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பிலும், குப்பைகளை அகற்றுவதற்கும் எம்மால் முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அநுராதபுரம், ஶ்ரீ மகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்தார்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும் குப்பை மேட்டுக்கு முடிவு எடுக்க முடியாமல் போய் விட்டது.

ஆனால் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனதாகவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.