தீபா மீது பல கோடி ரூபாய் மோசடி புகார்

தீபா மீது பேரவை விண்ணப்ப படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்னும் இயக்கத்தை தொடங்கினார்.

பேரவை சார்பாக 3 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன, ஒன்றின் விலை 10 ரூபாய்.

ஒரு விண்ணப்பத்திற்கு 25 உறுப்பினர்கள் வீதம் 250 ரூபாய் என கிட்டத்தட்ட 7 கோடிக்கும் மேல் விண்ணப்பத்தின் மூலம் வசூலானதாக தெரிகிறது.

மேலும், ஒன்றிய செயலாளர் பதவிக்கு 5 லட்சம், மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 லட்சம் என்று வசூலித்தனர்.

இது தவிர பல வழிகளிலும் கோடிக்கணக்கில் பணம் வசூலானதாம்.

இதனிடையில் தீபாவுக்கும், மாதவனுக்கும் ஏற்ப்பட்ட பிரச்சனையில் பெட்டி நிறைய பணத்தை எடுத்து கொண்டு மாதவன் வீட்டை விட்டு போய்விட்டதாக புகார் எழுந்தது.

இதனிடையில் தீபாவின் பேரவையின் அங்கீகாரம் ரத்தாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில் தீபா விண்ணப்ப படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.