மைத்திரியை தோற்கடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து விட்டோம் : மஹிந்த

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க தாம் மோற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வான்றில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

இரண்டு கட்சிகளின் ஊடாக தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது தற்போது இருக்கும் ஜனாதிபதிக்காக நாம் பணியாற்றவில்லை. அவரைத் தோல்வியடையச் செய்யவே நாம் செயற்பட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

மஹிந்த ராஜபக்ஷவுக்காக நாம் செயற்பட்டோம். ஆனால், எம்மால் வெற்றிபெற முடியாமல் போனது. இரண்டாவது முறை மேலும் 11 இலட்சம் வாக்குகளால் நாம் தோல்வியடைந்தோம்.

இவ்வாறாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் என்ற முறையில் இரண்டு தேர்தல்களில்தோல்வியடைந்தோம் என்பதை மனதிற்கொண்டே நாம் செயற்பட வேண்டும்.

நாம் தோல்வியடைந்தது சிலருக்கு மறந்துபோயுள்ளது. ஏன் தோற்றோம் என்பதை ஆராய வேண்டும். ஆனால், அதைக்கூட இன்னும் ஆராயவில்லை.

இவ்வாறான நிலையில், அடுத்து எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கு ஒரு முறைமை உள்ளது. குறுகிய பாதை எமக்கு இல்லை. அரசியல் அமைப்பும் சட்டமும் உள்ளது.

இவற்றுக்கு அப்பால் சென்று எம்மால் செயற்பட முடியாது. 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்பன 2020 ஆம் ஆண்டிலேயே நடைபெறும்.

அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டும். 2020 இல் எவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது குறித்தே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் என்ற

வகையில் நாம் சிந்திக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.