உலகளாவிய ரீதியில் இடம்பிடித்த இலங்கை!

பிரபல சுற்றுலா சஞ்சிகையான ‘கொன்டே நாஸ்ட் ட்ரவலரின்’ 2017 ஆம் ஆண்டில் பார்க்கப்பட வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

அந்த வகையில், குறித்த பட்டியலில் இலங்கையில் உள்ள 4 சுற்றுலாத் தலங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டில் பார்க்கப்பட வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்வருடத்தில் சுற்றுலா பயணிகளுக்களின் ஈர்ப்புமிக்க புதிய சுற்றுலாத் தலமாக இலங்கை அமையும் என்றும் கொன்டே நாஸ்ட் ட்ரவலர் என்ற சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் ஆசியாவில் 9 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன் இலங்கையில் நான்கு இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் kk beach, santani wellness resort & spa, Chena huts, Tangalle resort ஆகிய சுற்றுலாத் தலங்கள் குறித்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

உலகளாவிய ரீதியில் இலங்கையும் இடம்பிடித்துள்ளமையால் இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.