AH1N1 தொற்று குறித்து இலங்கையர்களுக்கு புதிய எச்சரிக்கை!

இன்புளுவன்ஸா AH1N1 தொற்று குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்புளுவன்ஸா AH1N1 தொற்று கடந்த நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் இந்தத் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

மேலும், இந்தத் தொற்று இருப்பவர்கள், அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவர்களை சந்தித்த பின்னர், குறித்த நபர் தமது கைகளை சவர்காரமிட்டு நன்றாக கழுவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைகளை சவர்காரமிட்டு நன்றாக கழுவாமல், மூக்கையோ, கண்களையோ அல்லது முகத்தையோ தொடக்கூடாது என சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார ஆலோசனை கூறியுள்ளார்.