கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா

‘சேவல்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘துரோகி’, ‘தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் பாஜ்வா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறாததால், திறமை இருந்தும் இவரால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவானது.

இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜுலியட்’, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மணை 2’, சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் பூனம் பாஜ்வாவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படங்களில் பூனம் பாஜ்வா கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருந்தார்.

தற்போது பூனம் பாஜ்வா ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூனம் பாஜ்வாவுக்கு அழுத்தமான நாயகி வேடமாம். இப்படத்தில் புடவை கட்டி குடும்ப பெண்ணாகவும் நடிக்கிறாராம். இதன்மூலம் தனக்கு நல்ல நடிகை என்ற பெயர் வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். இதனால், இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். தன்னை தேடிவந்த சில கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க மறுத்துவிட்டாராம்.