‘கபாலி’ சினிமா படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவர் நேற்று வந்தார். அப்போது நடிகை ராதிகா ஆப்தே நிருபர்களிடம் கூறியதாவது:-
கபாலி படத்தில் நான் ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவர் எளிமையானவர். படப்பிடிப்பிற்கு நேரம் தவறாமல் வந்துவிடுவார். அவரை டெலிவிஷனில் பார்த்து வந்த நான் அவருடன் ஜோடியாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை.
இந்திய சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருவது இல்லை. அது போன்ற படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கபாலி படத்தை தவிர வேறு எந்த தமிழ் சினிமாப்பட வாய்ப்புகளும் இன்னும் வரவில்லை. நான் தற்போது அஜய்குமாருடன் ‘