தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25ம் தேதி செவ்வாய்கிழமை அனைத்து கட்சிகள் சார்பாக மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவை தெரிவிக்கிறது.
“பல வருடங்களாக இயற்கையாலும்,காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழக விவசாயிகள், அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருவது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.
அதை வலியுறுத்தி வருகிற 25ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் நாடு தழுவிய அடையாள போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.