மாங்கல்ய பாக்கியம் சந்திராயன விரதம்

சந்திராயன விரதத்தை மேற்கொள்ளுபவன் பவுர்ணமியன்று 15 கவளம், அடுத்த நாள் முதல் 14, 13 என்று குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை அன்று சுத்த உபவாசம் இருக்க வேண்டும். அடுத்த நாள் ஒரு கவளம் மட்டும் உட்கொண்டு அது முதல் ஒவ்வொன்று கூட்டி பவுர்ணமி அன்று 15 கவளம் உட்கொள்ள வேண்டும்.

ஒரு மாதத்திற்கு இரண்டு அமாவாசை வந்தால், அது மலமாசம், அந்த மாதங்களில் விரதம், ஓமம், பிரதிக்ஞை-திருவுருவப் பிரதிஷ்டை கூடாது. ஒரு பவுர்ணமி முதல் அடுத்த பவுர்ணமி வரை உள்ள நாட்கள் கொண்டது சாந்திர மாசம்; முப்பது நாட்களை உடையது சவுர மாசம்;

சூரியன் ஒரு ராசியில் தங்கி இருக்கும் காலம் சவுர (அ) சூரிய மாதம்; 27 நாட்களைக் கொண்டது நட்சத்திர மாதம் எனப்படும். விரதகாலத்தில் தரையில் உறங்க வேண்டும். ஜபங்களை விடாமல் செய்ய வேண்டும். பிராமணர்களுக்குத் தக்ஷிணை, தானம் தர வேண்டும். பசு, சந்தனக்கட்டை, பாத்திரங்கள், நிலம், குடை, கட்டில் போன்றவை தானப் பொருள்களாகும்.