10 சதவீதத்தினால் தெங்கு அறுவடை வீழ்ச்சி!

வறட்சியின் காரணமாக தெங்கு அறுவடை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது என தெங்கு உற்பத்திச் சபை தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தெங்கு உற்பத்தி அறுவடை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும். இதற்கமைய தேங்காயின் விலை வீழ்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது.

தேங்காய்க்கான கோரிக்கை அதிகரித்துள்ளமையே விலை அதிகரிப்பிற்கு காரணமாகும்.

தெங்கு உற்பத்திச் சபை கடந்த வருடத்தில் 24 கோடி 60 இலட்சம் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ளது.

மாதிரி தெங்கு பூங்கா மற்றும் தென்னங்கன்றுகள் உற்பத்தியின் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என கபில யகந்தாவல தெரிவித்தார்.