காணி விடுவிப்பு உயர்மட்டத்தில் இன்று பேச்சு!

வட மாகாணத்தில் முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமறு வடக்கில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பாக படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

அதில் முடிவினை எடுத்த பின்னர் எந்த பகுதி எக்காலப்பகுதியில் விடுவிக்கப்படவுள்ளது என்பது தொடர்பான இறுதி அறிவித்தலும் கூட்டமுடிவில் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும்இ மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சார்பாக கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார்.