பேரவை உறுப்பினர் படிவத்தில் தீபா பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்னும் இயக்கத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி தொடங்கினார்.
பேரவை சார்பாக 3 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன, ஒன்றின் விலை 10 ரூபாய். 7 கோடிக்கும் மேல் விண்ணப்பத்தின் மூலம் வசூலானதாக தெரிகிறது
மேலும் ஒன்றிய செயலாளர் பதவிக்கு 5 லட்சம், மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 லட்சம் என்று வசூலித்தனர்.
இதனிடையில் தீபாவின் பேரவை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
ஆனாலும் அதன் பெயரில் மோசடி நடந்துள்ளதால் தீபா மீது சென்னை மாம்பலம் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மாம்பலம் பொலிசார் நேற்று தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்
அப்போது தீபாவிடம், உறுப்பினர் படிவம் எவ்வளவு விற்பனை செய்தீர்கள், அதற்கு கணக்கு ஏதேனும் இருக்கிறதா போன்ற கிடுக்கு பிடி கேள்விகள் கேட்கப்பட்டது.
பொலிசார் தீபா வீட்டுக்கு வந்ததையறிந்த அவரின் ஆதரவாளர்கள் அவர் வீட்டு முன்னர் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.