பன்னீர் செல்வம் உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்துக்கு “ஒய்” பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தினகரன் தரப்பினரால் ஓ.பன்னீர் செல்வம் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி, அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 21-ம் திகதி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.