அமெரிக்காவில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் நிதி அமைச்சில் கடமையாற்றி வரும் 125 பேர் பங்கேற்க உள்ளனர்.
வொஷிங்டனில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாடு ஒன்றிலேயே இவ்வாறு நிதி அமைச்சின் 125 அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக குறித்த மாநாட்டில் பிரதி நிதி அமைச்சர் மற்றும் அமைச்சின் ஒரு அதிகாரி மட்டுமே இலங்கையை பிரதிநிதித்துவம் செய்துள்ளனர்.
எனினும், இம்முறை நிதி அமைச்சின் 125 அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த விடயம் குறித்து நிதி அமைச்சர் விசாரணை நடத்த வேண்டுமென அரசாங்க உயர் அதிகாரியொருவர் கோரியுள்ளார்.
அரசாங்கமே இதற்கான சகல செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்கும் இந்த இலங்கை அதிகாரிகள் ஒரு வார காலம் அமெரிக்காவில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.