ஜெயலலிதா உடலில் தெர்மாகோலை போட்டிருந்தால் ஆவி வெளியேறியிருக்காது: பிரபல நடிகர் கிண்டல்

தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் வைகை அணையின் நீர்மட்டத்தை தெர்மோகோல் அட்டைகளால் மூடி நீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது சமூக வலைதளங்களில் நகைச்சுவைக்கு ஆளாகியுள்ளார்.

இவரின் இந்த முயற்சியை பலரும் கிண்டலடித்துள்ள நிலையில், சமீபத்தில் அமைச்சர் ஒருவர் தெர்மாகோலை வைத்து ஆற்றை மூடி ஆவி வெளியேறாமல் தடுக்க முயன்றார்.

அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தெர்மாகோலை அவர்மீது போட்டிருந்தால் அவருடைய ஆவி வெளியேறாமல் இருந்திருக்குமே? என்று நையாண்டியாக பேசியுள்ளார்.