ஜெயலலிதாவின் அறை கதவு உடைப்பு! மூன்று பெட்டிகளில் இருந்த பொருள் மாயம்? அதிர்ச்சி தகவல்கள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறை கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் கட்டிப்போடப்பட்டிருந்தார்.

அதன் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் உள்ள அவரிடம் பொலிசார்

தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொடநாடு பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலா அறையில் பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த மூன்று பெட்டிகள் உடைக்கப்பட்டதாகவும் அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. காவலாளியை கொலை செய்தவர்கள் அந்த ஆவணங்களை திருடி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.