எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நேர்காணல் திடீர் ஒத்திவைப்பு : ஜெ.தீபா அறிவிப்பு!!

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நேர்காணல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் வரும் 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் மக்கள் பணியாற்றிய உண்மையான அம்மாவின் விசுவாசிகள் கடந்த நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், கரூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பேரவை செயல் வீரர்கள், வீராங்கனைகள் என்னை நேரில் சந்தித்து பேரவையில் பணியாற்ற பொறுப்புகள் வழங்க வேண்டி விருப்பு மனுக்களை அளித்தார்கள்.

மேலும் நான் ஏற்கனவே எனது அறிக்கையில் தெரிவித்திருந்த 25.04.2017 நடைபெற இருந்த நேர்காணல் நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தினால் 29.04.2017 மாற்றப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்து அவரவர் செயல்பாடுகளுக்கு ஏற்ப பொறுப்புகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.