ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வங்காள தேச அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது அணியை அறிவித்துள்ளன. காயத்தால் விளையாடாமல் இருந்து கோரி ஆண்டர்சன், ஆடம் மில்னே மற்றும் மெக்கிளெனகன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து அணியில் ஐந்து சிறப்பு பேட்ஸ்மேன்கள், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து ஆல்ரவுண்டர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் விக்கெட் கீப்பர் இடம்பிடித்துள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் மெக்கிளெனகன் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், கொலின் டி கிராண்ட்ஹோம் கொல்கத்தா அணியிலும், கோரி ஆண்டர்சன் டெல்லி அணியிலும் விளையாடி வருகின்றனர்.
சாம்பயின்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. கோரி ஆண்டர்சன், 3. ட்ரென்ட் போல்ட், 4. நீல் ப்ரூம், 5. கொலின் டி கிராண்ட்ஹோம், 6. மார்ட்டின் கப்தில், 7. டாம் லாதம், 8. மிட்செல் மெக்கிளெனகன், 9. ஆடம் மில்னே, 10. ஜிம்மி நீஷம், 11. ஜீத்தன் பட்டேல், 12. லூக் ரோஞ்சி. 13. மிட்செல் சான்ட்னெர், 14. டிம் சவுத்தி, 15. ராஸ் டெய்லர்.