இலங்கையில் மீண்டும் மலேரியா அபாயம்: கட்டுநாயக்கவில் தீவிர பரிசோதனை!

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் உள்ளதாக மலேரியா நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் மலேரியா முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளபோதும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களால் அந்த நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள், மலேரியா தொற்றுக்கு உள்ளானவர்களா என்பதைக் கண்டறிய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சுகாதார மருத்துவ காரியாலயம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுகாதார மருத்துவ காரியாலயம் ஊடாக, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மலேரியா நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.