டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக குரல் கொடுத்த இவான்கா டிரம்ப்!!

ஜேர்மனியில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்பின் மகள் இவான்கா பெண்கள் தொடர்பான தனது தந்தையின் நிலைபாட்டை நியாயப்படுத்தியது மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா ஜேர்மனியில் நடந்த ஜி-20 நாடுகளின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார்

அப்போது அவர் மேடையில் பேசுகையில், டொனால்டு டிரம்ப் குடும்பங்களை ஆதரிக்கும் மிகப்பெரிய சாம்பியன் ஆவார் .

மேலும், கடந்த ஆண்டு தேர்தலின் போது எனது தந்தை பெண்களை பற்றி ஆபாசமாக பேசியதாக காணொளி வெளியானது.

பெண்களிடம் பாலியல் ரீதியாக டிரம்ப் தவறாக நடந்து கொண்டார் எனவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த குற்றத்தை எனது தந்தையோ அல்லது அவருடன் பணியாற்றிய பெண்களோ ஏற்று கொள்ளவில்லை என இவான்கா குறிப்பிட்டார்.

டிரம்பின் பெண்களுக்கெதிரான செயல் ஆதாரத்துடன் அப்போது கூறப்பட்ட நிலையில், அவர் மகளின் பேச்சுக்கு கூட்டத்தில் இருந்த மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.