ஐ.பி.எல். கிரிக்கெட்: புனே அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?

புனே சூப்பர் ஜெயன்ட் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் (பெங்களூரு, ஐதராபாத், மும்பைக்கு எதிராக) தொடர்ச்சியாக வெற்றியை ருசித்ததும் அடங்கும்.

சரியான நேரத்தில் விக்கெட் கீப்பர் டோனி, ரஹானே பார்முக்கு திரும்பியிருப்பதும், தொடக்க ஆட்டக்காரர் திரிபாதியின் நேர்த்தியான பேட்டிங்கும் புனே அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிப்பதில் ஸ்டீவன் சுமித் படையினர் முனைப்பு காட்டுகிறார்கள்.

முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை சேகரித்துள்ளது. முந்தைய ஆட்டத்தில் 131 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி அதை வைத்து கொண்டு பெங்களூருவை 49 ரன்களுக்குள் மடக்கிஅனைவரையும் மூக்கு மீது விரலை வைக்க வைத்துவிட்டது.

“கடைசி வரை நம்பிக்கையையும், உத்வேகத்தையும் இழக்காமல் களத்தில் அதி தீவிரமாக செயல்படவேண்டும். சற்று தளர்ந்தாலும் அணியில் இடத்தை இழக்க நேரிடும்” என்று கம்பீர் சக வீரர்களை எச்சரித்ததன் பலனே அந்த சூப்பர் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கிறது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் வலுவாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே அணிக்கும் ‘வேட்டு’ வைக்க கங்கணம் கட்டி நிற்கும்