2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 15ஆம் திகதி கூறப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி காலத்தில் திமுக-வை சேர்ந்த ஆர்.ராசா மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆர்.ராசாவுடன் திமுக-வை சேர்ந்த கருணாநிதியின் மகளான கனிமொழி எம்.பி மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 2011லிருந்து நடக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 15ஆம் திகதி வழங்கப்படும் என நீதிபதி ஷைனி அறிவித்து உள்ளார்.