முதல்வர் பதவிக்கு குறிவைத்த தினகரன்: வெளியான பரபரப்பு தகவல்

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது.

அதில் வெற்றி பெற்றால்தான் முதலமைச்சர் பதவியை எளிதாக பெற முடியும் என்று அவர் குறி வைத்திருந்தார்.

இதற்காக அதன்காரணமாகவே அவர் ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார்.

நாங்கள் விசாரணை நடத்திய போது முதலில் அவர் இதை மறுத்தார். ஆனால் ஒரே கேள்வியை நாங்கள் 5 விதமாக கேட்ட போது அவர் சுகேசிடம் பேசியதை ஒப்புக் கொண்டார்.

அவரது பெங்களூர் நண்பர் மல்லிகார்ஜுனா இந்த பணப்பரிமாற்றங்களுக்கு உதவியாக இருந்துள்ளார். அவர்தான் முதல் தவணை தொகையாக ரூ.10 கோடியை திரட்டியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சில தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளிடம் ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது.

அந்த பணத்தை அவர்கள் கொச்சியை சேர்ந்த ஹவாலா ஏஜெண்டு ஷேக் பைசல் மற்றும் டெல்லி சாந்தினி சவுக்கை சேர்ந்த 2 பேர் மூலம் கைமாற்றியுள்ளனர்.

ஹவாலா ஏஜெண்டுகள் அனைவரும் எங்கள் விசாரணைக்குள் உள்ளனர். அவர்கள் ரூ.10 கோடி பணம் கைமாறியதை ஆதாரபூர்வமாக ஒப்புக்கொண்டனர்.

எனவே அடுத்தக் கட்டமாக சென்னை, கொச்சி, பெங்களூர் நகரங்களில் விசாரணையையும், சோதனையும் நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.