ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து பிரசாரம் செய்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனே இவ்வாறு சரணடைந்துள்ளார்.
மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜெயலலிதாவின் உருவத்துடன்கூடிய சவப்பெட்டி மாதிரியை வைத்து, அதன் மீது தேசியக் கொடியைப் போர்த்தியபடி வாகனத்தில் வைத்து பிரசாரம் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாஃபா பாண்டியராஜனை விசாரணைக்காக பொலிசார் தேடி வந்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மாஃபா பாண்டியராஜன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.