ஐ.சி.சி. வருமானம் பகிர்வில் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதில் இந்தியாவிற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய முறையை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுக்கிறது.
இந்த திட்டத்தின்படி இந்தியாவிற்கு முதலில் 293 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்தியா குறைந்தது 450 மில்லியன் டாலர் தந்தால்தான் முடியும் என்று கேட்டது. ஆனால் ஐ.சி.சி. 390 மில்லியன் டாலர் வழங்க முன்வந்துள்ளது. இதுகுறித்து மே மாதம் நடைபெற இருக்கும் கூட்டத்தில் திருத்தம் கொண்டு வர சம்மதம் தெரிவித்துள்ளது.
450 மில்லியன் டாலர் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது. மேலும், ஐ.சி.சி. சாம்பியன் தொடருக்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஐ.சி.சி. உடனான பிரச்சினை முடிந்தால்தான் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஐ.சி.சி. முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, சிறப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை புறக்கணிப்பது குறித்து முடிவு எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேவேளையில் ஐ.சி.சி.யும் இந்திய அணியை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது.