யாழில் 04 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழ். காங்கேசன்துறையில் 04 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிந்த நபர் கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.